ஜெயலலிதாவை சசிகலா செல்லமாக எப்படி அழைப்பார் என தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரை அவரது நெருங்கிய தோழியான சசிகலா எப்படி செல்லமாக அழைப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஜெயலலிதாவுடன் பல ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவரது நெருங்கிய தோழி சசிகலா.

சில நேரங்களில் சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியே அனுப்பினாலும், அவரால் சசிகலாவை பிரிந்து இருக்க முடியாமல் மீண்டும் சேர்த்துக்கொண்டார். அப்படி ஒரு பாசப்பிணைப்பு அவர்கள் இருவருக்கும் இடையே உண்டு என்கிறார்கள் இவர்களது நட்பை பல ஆண்டுகளாக கவனித்துவருவோர்.

இந்நிலையில் ஜெயலலிதாவை சசிகலா ‘குட்டிப்பையா’ என செல்லமாக அழைப்பாராம் என்ற தகவல் வந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாளும் அவருடன் இருந்தது சசிகலா தான்.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு அவரது அறைக்குள் சென்ற சசிகலா ஜெயலலிதாவை பார்த்து, குட்டிப்பையா எல்லாம் சரியாயிடும்டா என சொல்லி கொஞ்சிக் கொண்டு இருந்தாராம்.

அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு வர சசிகலா அமைதியாகிவிட்டாராம். பொதுவாக சசிகலா ஜெயலலிதாவை குட்டிப்பையா என்றுதான் அழைப்பார் என மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments