நிஜங்கள் பஞ்சாயத்து நிகழ்ச்சி எப்படிப்பட்டது? நடிகை குஷ்பு கொடுத்த விளக்கம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

நிஜங்கள் பஞ்சாயத்து நிகழ்ச்சி குறித்து அந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகை குஷ்பு ரசிகர் ஒருவருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடத்தி வரும் நிஜங்கள் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வரவேற்பு வந்தாலும், பலர் இது சர்ச்சையை ஏற்படுத்துவதாக திட்டி வருகின்றனர்.

டுவிட்டரிலும் வசைபாடி பாடி வரும் அந்த சிலருக்கு நடிகை குஷ்புவும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை குஷ்பு டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

தப்பா எடுத்துக்க வேணாம் மேம் உங்க ரசிகனாக இந்த கேள்வி என ஒருவர் இந்த நிகழ்ச்சி குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு குஷ்பு, 5 விரல்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. அதே போல் தான் பலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.

வழக்கறிஞர்கள், டாக்டர்கள், பொலிஸ், கவுன்சிலிங் அளிப்பவர்கள் என பலர் எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அவர்களின் அறிவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments