அம்மாவை புகழ்ந்த இந்த வாயால்!...நடிகை விந்தியா எடுத்த அதிரடி முடிவு

Report Print Fathima Fathima in இந்தியா

நடிகை விந்தியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவுக்கு மேடைபேச்சுகளில் பிரபலமானவர்.

மற்ற கட்சிகளை வறுத்தெடுப்பத்தில் இவரை மிஞ்சி யாரும் இருக்க முடியாது.

இவரது பேச்சுகளை கேட்ட ஜெயலலிதா கார்டனுக்கு அழைத்து பாராட்டினார், அம்மாவின் தீவிர பக்தையாக மாறிய விந்தியா அரசியலில் புகுந்து விளையாடினார்.

ஆனால் இப்போது அம்மாவின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளாராம்.

அம்மாவை புகழ்ந்த இந்த வாயால் சின்னம்மாவை புகழ்வதா? என அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம்.

அதாவது, அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப் போகிறாராம், அதுமட்டுமின்றி ஜெயலலிதாவை பற்றி புத்தகம் எழுதவும் முடிவெடுத்துள்ளாராம்.

சசிகலாவை அடுத்த பொதுச்செயலாளராக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அடிமட்ட தொண்டர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அம்மா இருந்த இடத்தில் சசிகலாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது என கூறிவருகிறார்களாம்.

சமீபத்தில் நடிகை ஆனந்தராஜ்கூட, தற்போதைய சூழலில் நிதானம் தேவை, 6 கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments