சசிகலா கணவர் நடராஜனுக்கு பத்ம விருதுகள்! அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து அவரது தோழி சசிகலாவை பொதுச் செயலாளராக்க வேலைகள் படுஜோராக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் தனக்கு பத்மா, ரத்னா விருதுகள் தருவதாக அணுகியதாகவும், அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர், நம்ம ஊரில் விருதுகள் எல்லாம் விலை கொடுத்து வாங்கப்படுபவை, ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை, என்னிடம் கூட ஒரு பத்மா, ரத்னா விருதுகள் தருவதாக அணுகினார்கள், நான் அதை தவிர்த்துவிட்டேன் என பேசினார்.

தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் பழனிகுமணனுக்கு பொருளாதாரத்தில் சிறந்த கட்டுரைகளை எழுதியதற்காக அமெரிக்காவின் புலிட்சர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments