மருத்துவமனையில் ரஜினியின் பாட்ஷா படம் பர்த்த கருணாநிதி: ஏன் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவரான கருணாநிதி நேற்று இரவில் திடீரென ஏற்பட்ட உடல் நலப் பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில் கருணாநிதி சளித்தொல்லை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்தது.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.

அவர் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், இன்று மாலை சிறிது நேரம் லேப்டாப்பில் பாட்ஷா படம் பார்த்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments