சசிகலாவுடன் ராம் திடீர் சந்திப்பு பின்னனியில் நடப்பது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையின் பிரசித்திப் பெற்ற மூத்த பத்திரிகையாளரான இந்து என் ராம் இன்று(13) திடீரென சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்துள்ளார்.

அங்கு பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலங்களில் அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்தால் தமிழகத்தில் பேரழிவு ஏற்படும் என சசிகலாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இவரின் திடீர் போயஸ் கார்டன் விஜயமானது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில்,சசிகலாவின் இராஜ்ஜியமே மேலோங்கியிருந்தது. இதற்காக கடும் விமர்சனங்களை ராம் வெளிப்படுத்தியிருந்தார் .

சசிகலாவை அரசியலுக்குள் விட கூடாது என கடுமையான வாதங்களை அவர் முன்வைத்திருந்தார்.

குறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவாக பல அமைச்சர்கள் காணப்பட்டாலும் அதனை ஏற்று அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது நாட்டிற்கு பேரழிவாக அமையும் என ராம் அறிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே இன்று திடீரென போயஸ் கார்டனுக்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்துள்ளமையானது பல்வேறான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பிலான விடயங்கள் இன்னமும் வெளிவரவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments