மக்களோ கஷ்டத்தில்... ஆனால் டிவியில் சின்னம்மா புராணம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையை நேற்று தாக்கிய வர்தா புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையெங்கும் மரங்கள் சரிந்து கிடக்கின்றன, தொலைத்தொடர்பு இணைப்புகளும் சரியாக கிடைக்காத காரணத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடந்தாலும் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் வர்தா புயல் பற்றிய செய்திகளை காட்டிலும், சின்னம்மா புராணத்தையே பாடி வருவதால் தொண்டர்கள் உட்பட மக்களும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே அதிமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர்-ல் முதல் நாள் வி.கே.சசிகலா என குறிப்பிட்டிருந்ததும், அடுத்த நாளே சின்னம்மா என்று குறிப்பிட்டிருந்ததும் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments