வர்தா புயல் நேற்று சென்னையை புரட்டி போட்ட நிலையில் இனிமேல் இவ்வாறான புயல்கள் உருவாகி அச்சுறுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர், 1891-ம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை 122 ஆண்டுகளுக்கு இந்திய கடல் பகுதியில் ஏற்பட்ட புயல்களை ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளனர்.
எர்த் சயின்ஸ் அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில், கடலின் வெப்பநிலை அதிகரித்து வருவதால் புயல்களும் அதிகளவில் உருவாகும்.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் புயல்களின் சக்தியும் அதிகரிக்கும், இனிவரும் காலங்களில் புயல்கள் அதிகளவு உருவாகி அச்சுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.