தேநீர் கொடுத்து திருமணத்தினை நடத்திய புத்திசாலி தம்பதிகள்

Report Print Sujitha Sri in இந்தியா

திருமணம் நடத்துவதற்கான போதுமான பணம் இல்லாத காரணத்தினால் உத்தர பிரதேச மாநிலத்தினை சேர்ந்த மணமக்கள் தேநீர் கொடுத்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

மகாவீர் மற்றும் அவரது மனைவி இருவரும் மாற்று திறனாளிகள். மத்திய அரசினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் மிகவும் கவலை அடைந்த தம்பதிகள் இவ்வாறு தங்களது திருமணத்தில் கலந்து கொண்டோருக்கு தேநீர் கொடுத்து திருமணத்தினை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் 650 கோடி ரூபா செலவில் கர்நாடகாவில் பிரம்மாண்ட திருமணம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments