இருளில் மூழ்கியது சென்னை! சூறையாடிய வர்தா

Report Print Deepthi Deepthi in இந்தியா

வர்தா புயல் சூறைக்காற்றுடன் பழவேற்காடு அருகே 3 மணி முதல் 5 மணி வரை கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்தாலும் வலுவிழக்கவில்லை என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வட தமிழகத்தில் உள்பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

அதி தீவிர வர்தா தாக்குதலால் குடிசைகள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள் சரிந்ததில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோர் ராயப்பேட்டை, ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர், யானைக்கவுனி, ராயப்பேட்டை, தி.நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வர்தா புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மின் தடை பாதிப்பு காரணமாக மெட்ரோ ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ், ரயில், விமான போக்குவரத்து முடங்கியது

  • 7 பேர் பலி; 10000 பேர் வெளியேற்றம்
  • ரூ.1000 கோடிக்கு சேதம்
  • 120 கி.மீ. வேகத்தில் சுழற்றி அடித்தது காற்று
  • இருளில் மூழ்கியது நகரம்
  • 20 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments