தமிழகத்தின் சேதங்களை அப்புறப்படுத்த விஷேட கப்பல்கள் தயார் நிலையில்

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழகத்தை தாக்கிய வர்தா புயலினால் ஏற்பட்ட சேதங்களை அப்புறப் படுத்துவதற்காக விஷேட குழு ஒன்று சென்னை வந்திறங்கியுள்ளது.

புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு பணி மற்றும் நிவாரண உதவிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று அதிகாலை இந்திய கடற்படையின் சிவாலிக், காட்மாட் ஆகிய 2 கப்பல்கள் சென்னைக்கு வந்துள்ளன.

கடற்படை கப்பல்களில் மீட்பு பணிகளுக்காக படகுகள், சிறிய ரக கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், உணவு, கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்கள், துணிகள், மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் போதுமான வகையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடற்படை கப்பல்களில் நீச்சல் வீரர்கள் அடங்கிய 10 குழுவினர் வந்திறங்கியுள்ளனர். மேலும் கடற்படையை தவிர இந்திய இராணுவப்படையின் 6 குழுக்களும் தயார் நிலையில் காணப்படுகின்றனர்.

மேலும், இது தவிர விஷேட கப்பல்களும், விஷேட ஹெலி கொப்டர்களும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments