வழமைக்கு திரும்பியுள்ள மெட்ரோ ரயில் சேவை

Report Print Gokulan Gokulan in இந்தியா

சென்னை வரலாற்றையே திசை திருப்பி போட்ட வர்தா புயல் சென்னை துறைமுகம் வழியாக கரையைக் கடந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்தாப் புயல் புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் பொதுமக்களை அவதானமாக நடந்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்தாப் புயலின் தாக்கம் காரணமாக சென்னை நகரின் பிரதான வீதிகள் பலவற்றில் மரங்கள் சாய்ந்து கிடப்பதனால் போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சேதமடைந்த பொருட்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை பல பாகங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருப்பதாகவும் அதனை சீர் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments