வழமைப் போல ஆவின் பால் கிடைக்கும் - தமிழக அரசு அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழகமெங்கும் தடையில்லாமல் ஆவின் பால் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வர்தா புயல் காரணமாக தமிழக மெங்கும் பால் உற்பத்திகள் மற்றும் பால் விற்பனை என்பன நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வழக்கம் போல் ஆவின் பால் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று வழமைப் போல அல்லாது 11.49 லட்சம் லீற்றர் பால் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றுள் குறித்தளவு தொகை நுகர்வோருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

எனவே பால் விநியோகம் இன்று இயல்பாக இருந்தமையை இவ்விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சென்னையின் பிரதான பாலுற்பத்தி நிலையங்களான மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் உற்பத்தி நிலையங்களில் பால் முழுமையான உள்ளதால், பால் உற்பத்தி இன்று வழக்கம்போல் சீராக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments