போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படும் - முதல்வர்

Report Print Gokulan Gokulan in இந்தியா

வர்தா புயல் பாதிப்புகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று(12) பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது அமைச்சரிடம் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப் போட்ட வர்தா புயலை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும்,

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள அதிகாரிகள் தொடர்பாகவும் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பினை அடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வெளியிடப்பட்ட வேண்டுகோள் அறிக்கையில், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மீட்பு-நிவாரணப் பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments