அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தின் நிலை என்ன..?

Report Print Vethu Vethu in இந்தியா

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வர்தா புயல் தமிழ்நாட்டு எல்லையை கடந்த பின்னரான நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கருத்து வெளியிட்டார்.

வங்க கடலில் உருவான வார்தா புயல் இன்று மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரைக்குள் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 100 தொடக்கம் 120 கிலோமீற்றர் வரை வீசியது.

தற்போது மணிக்கு 70 முதல் 85 கிலோமீற்றர் வரை வீசுகிறது. காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

அதிதீவிர வார்தா புயலானது, வலு குறைந்து புயலாக மாறி உள்ளது. அது வலு இழக்கும். மழை படிப்படியாக குறையும். வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் கனமழை பெய்யும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments