மிரட்டிய வர்தா புயல்: பெயர்ந்து விழுந்த ஹொட்டல் கட்டிடத்தின் பாகங்கள்!

Report Print Arbin Arbin in இந்தியா

வர்தா புயலின் வேகத்தில் வீசிய காற்றில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஓட்டல் கட்டடம் ஒன்றின் பாகங்கள் பெயர்ந்து விழுந்தது.

வர்தா புயலின் தாக்கத்தால் சென்னையில் மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.

இந்நிலையில், தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் ஓட்டலின் கட்டிடத்தில் உள்ள கண்ணாடிகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. ஓட்டல் கட்டடத்தின் பாகங்கள் பெயர்ந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னையில் வர்தா புயல் காரணமாக கனமழை பெய்ததால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனர். புயல் கரையைக் கடந்த போது சுமார் 100 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சூறைகாற்றால் தூக்கி வீசப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments