வர்தா புயலின் மையப் பகுதி பழவேற்காட்டை கடந்தது

Report Print Shalini in இந்தியா

வர்தா புயலின் மையப் பகுதி திருவள்ளூர் அருகே உள்ள பழவேற்காட்டில் கரையை கடந்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நண்பகல் 12 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது.

இந்த நிலையில் புயலின் மையப் பகுதி 3 மணிக்கு கரையை கடக்கத் துவங்கியது.

வர்தா புயலின் மேற்குப் பகுதி சென்னை அருகே கரையை கடந்துவிட்டது.

புயலின் மையப்பகுதி 3 மணிக்கு துவங்கி 4 மணிக்குள் திருவள்ளூர் அருகே உள்ள பழவேற்காட்டில் கரையை கடந்தது.

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை புயலின் கிழக்கு பகுதி கரையை கடக்கும். 5.30 மணியளவில் அதிதீவிரம், தீவிர நிலையில் இருந்து புயலாக குறையும். இரவு 11.30 மணிக்கு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறையும்.

மேலும் இந்த வர்தா புயலின் தாக்கத்தினால் சென்னையில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இருவர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments