வர்தா புயலின் உக்கிரம்! இருவர் பலி

Report Print Shalini in இந்தியா

சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையை வலிமையான புயல் இன்று தாக்கியுள்ளது. மணிக்கு 140கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

100இற்கும் அதிகமான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன, 9,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை சிதைத்து வரும் இந்த வர்தா புயலால் பகலிலேயே இருளில் மூழ்கியுள்ளது.

இப்புயலுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments