வெள்ளம் தேங்கியது.. சென்னை ஏர்போர்ட் ஓடுதளம் மூடப்பட்டது.. விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

Report Print Thayalan Thayalan in இந்தியா

வர்தா புயல் காரணமாக சென்னையில் விமானங்களால் தரையிறங்க முடியவில்லை. எனவே காலை 11 மணி நிலவரப்படி, 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன. 9 விமானங்கள் தாமதமாகின. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

எனவே சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை இழுத்து மூடப்பட்டது. தண்ணீர் தேங்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் மழையும், காற்றும் விடாத காரணத்தால், மதியம் 3 மணிவரை ஓடுதளம் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னையில் புற நகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேலும் புயல் ஆந்திராவின் தெற்கு பகுதி வழியாக செல்லும் என்பதால், திருப்பதி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாம். இவ்விரு விமான நிலையங்களுக்கு வர வேண்டிய விமானங்கள், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

- One India

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments