இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி

Report Print Sujitha Sri in இந்தியா

உலகிலுள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் மீலாதுன் நபி என்ற பெயரில் உலகம் முழுவதும் நபிகளின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்லாமியர்களுக்கு தனது வாழ்த்து செய்தியை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில்,

இந்த விழா நமது சமூகத்தில் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தட்டும். நாட்டில் என்றென்றும் அமைதியும், வளமும் நிலைக்கட்டும். அனைவருக்கும் மீலாதுன் நபி வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments