ஜெயலலிதாவின் சிகிச்சை செலவு ரூ.90 கோடியா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

75 நாட்களாக முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு ரூ.90 கோடி என சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்துமாறு தமிழக அரசிடம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

முதல்வரின் சிகிச்சை செலவு ரூ.90 கோடி என்பது எல்லாம் பொய்யான செய்தி. அவ்வளவு செலவு ஆக வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றே யாரோ தவறான வதந்திகளை பரப்பி விடுகின்றனர் என அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், முதல்வர், அமைச்சர்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால், அவர்களுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான செலவை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்கவில்லை.

எவ்வளவு செலவு ஆனது என்பதையும் சொல்லவில்லை, அரசும் சிகிச்சைக்கு செலவான பணத்தை செலுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments