நிதானம் தேவை! சசிகலாவுக்கு எதிராக நடிகர் ஆனந்தராஜ்?

Report Print Fathima Fathima in இந்தியா

முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின்னர் அவரது தோழி சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளராக வர வேண்டும் என மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதை தொண்டர்கள் பலரும் விரும்பவில்லை என தெரிகிறது, ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் கூறுகையில், மூத்த நிர்வாகிகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்.

காலம் அறிந்து தான் எதையும் செய்ய வேண்டும், பொதுச்செயலாளர் நியமனத்தில் மவுனம் காக்க வேண்டும்.

அதிமுக என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கிடையாது.

தொண்டர்களின் உணர்வுகளுக்கும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பெண்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments