என்னை வீழ்த்த சதி செய்கிறார்கள்: நடிகர் கருணாஸ் வேதனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களே என்னை வீழ்த்த சதி செய்கின்றனர் என நடிகரும், திருவாடனை எம்எல்ஏவும் ஆன கருணாஸ் கூறியுள்ளார்.

நடிகர் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு, ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியின் போது இளைஞரிடம் செல்பி எடுத்துக்கொண்டது என சர்ச்சையில் சிக்கியுள்ள கருணாஸ், என்னை வீழ்த்துவதற்காகவே இந்த சதி நடக்கிறது என கூறியுள்ளார்.

பசும்பொன் தேவர் மேல் கொண்ட பக்தியின் காரணமாக, என் சமூகத்தினருக்கு நல்லது செய்ய மேண்டும் என்ற நோக்கில், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை ஆரம்பித்தேன்.

எனது விசுவாசம் மற்றும் உண்மையை அடிப்படையாக வைத்தே கடந்த தேர்லில் அம்மா அவர்கள் எனக்கு எம்எல்ஏ சீட் வழங்கினார்.

ஆனால், எனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு என்னுடைய வளர்ச்சி பிடிக்கவில்லை. இதனால் என்னை வீழ்த்துவதற்கு சதி செய்கிறார்கள்.

எனது மனைவியின் நகை மற்றும் என்னிடம் இருந்த பணத்தினை செலவழித்து 150 மாணவர்களை படிக்கவைத்தேன். இப்போது அவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் நான் விளம்பரத்திற்காக சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை. தற்போது என்னைப்பற்றி சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் அம்மாவின் ஆசியோடு நான் எதிர்கொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments