சென்னையில் விடிய விடிய கனமழை: இரவு போல் காட்சியளிக்கிறது! அச்சத்தில் மக்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

வர்தா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வர்தா புயல் கரையை கடந்து வருவதாகவும், சென்னைக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வர்தா புயல் கரையை கடந்த பின்பும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றத்துடனும், கடல் அலைகள் 1 மீற்றர் உயரத்திற்கு எழக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments