ஜெயலலிதாவின் தோல்விக்கு நான் தான் காரணம்: முதல் முறையாக பேசிய ரஜினிகாந்த்

Report Print Deepthi Deepthi in இந்தியா

1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலமைச்சர் தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக நான் இருந்தேன்.

தேர்தல் நடைபெற்ற நேரத்தில், ஜெயலலிதாவை பற்றி விமர்சித்து எழுதினேன். இதனால் அவர் தோல்வியடைந்ததற்கு நான் முக்கிய காரணமாக இருந்தேன். இதனால் அவர் மனதளவில் பாதிப்படைந்தது.

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு, எனது புதல்வி சௌந்தர்யாவின் திருமணம் எனது வீட்டில் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என நினைத்தோம்.

ஆனால், அவர் வரமாட்டார் என நினைத்து சம்பிரதாயத்துக்காக சென்று திருமண பத்திரிக்கையை சமர்ப்பித்தேன்.

திருமண பத்திரிக்கையை பார்த்த அவர், இந்த திகதியிலேயே எனக்கு கழக்கத்தின் சார்பில் முக்கிய கூட்டம் ஒன்று இருக்கிறது.

இருப்பினும், அந்த கூட்டத்தை வேறு ஒரு நாளில் மாற்றிவைத்துவிட்டு, நான் திருமணத்திற்கு கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என கூறினார்.

அதன்படியே, திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய பொன்மனது படைத்தவர், இன்று நம்முடன் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments