அரசியல்வாதி மீது இவ்வளவு அன்பா? வியந்த பிரித்தானிய இளைஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

ஒரு அரசியல்வாதி மீது மக்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது வியப்பாக உள்ளது என ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கானோரை பார்த்து பிரித்தானிய வாலிபர் வியப்புடன் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த வி.ஐ.பி.,க்கள் கலைவாணர் அரங்கம் அருகே பிரத்யேக வழியில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் புகைப்படங்களை எடுத்த வெளிநாட்டு இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த 29 வயதான ஜோ, பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இருந்து வந்துள்ளேன். இந்தியாவை சுற்றி பார்க்க இரண்டாவது முறையாக வந்துள்ளேன்.

மேற்கு தொடர்ச்சி மலையின் மீது கொண்ட காதலால், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மலை பிரதேசங்களில் சுற்றி வருகிறேன்.

நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனை வழியாக வர நேர்ந்தது. அங்கு மக்கள் அழுதபடி இருந்தனர். விசாரித்த போது முதல்வர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுவதை அறிந்தேன். எங்கள் நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது.

ஒரு அரசியல்வாதி மீது மக்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது வியப்பை தருகிறது. அவரை பற்றி இணையதளத்தில் தேடினேன். அப்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி அறிந்தேன்.

காலையில் கண் விழித்ததும் அவர் காலமானதை அறிந்து அஞ்சலி செலுத்த வந்தேன். உள்ளே நுழைய முடிய வில்லை. இந்த அனுபவத்தை மறக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments