அவர் இறக்கும் முன்... நான் இறக்க வேண்டும்: நிறைவேறிய ஜெயலலிதாவின் ஆசை!

Report Print Santhan in இந்தியா

மறைந்த தமிழக முதல்வரான ஜெயலலிதா, மூத்த பத்திரிக்கையாளரான சோவுக்கு முன்னால் தான் இறக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், தற்போது அது நிறைவேறியுள்ளதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானர். அவருடைய துக்கத்தில் இருந்து தமிழக மக்கள் மீளாது இருக்கும் போது, இன்று அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ ராமசாமி அதே அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இருவருக்கும் திரைபிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான முருகன், சோ ராமசாமி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கும் இடையே இருந்த நெருங்கிய நட்பைப் பற்றி கூறியுள்ளார்.

ஒருமுறை சோவுடன் பேசிக்கொண்டிருந்த ஜெயலலிதா, நீங்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறீர்கள். எனக்கு ஒரு ஆசை, உங்களுக்கு முன்னால் நான் இறக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா சோவிடம் கூறியதாக முருகன் தெரிவித்துள்ளார்.

அன்று ஜெயலலிதா இப்படி கூறியதை தான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அது தற்போது உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பது தனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றும் இது எனக்கு மட்டுமல்ல, ஜெயலலிதா மற்றும் சோ ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது அங்கிருந்த எல்லாருக்கும் இது தெரியும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments