ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் என்ன ஆனார் தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்வில் அவரது முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனை காண முடியவில்லையே என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அவர் சிகிச்சை பெற்றுவந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. மாலையில், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த ஜெயலலிதாவுக்கு இன்றும் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உடலின் அருகிலேயே இருந்தனர்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்களும் அங்கே இருந்தனர். ஆனால், அவரது முன்னாள் வளர்ப்பு மகனான வி.என்.சுதாகரனை அந்த இடத்தில் பார்க்கவே முடியவில்லையே என்று பொதுமக்கள் பேசத்தொடங்கியுள்ளனர்.

வி.என்.சுதாகரன் அஞ்சலி நிகழ்விலும் இறுதிச்சடங்குகளிலும் பங்கேற்றாரா என்பதே தெரியவில்லை என்றும் ஆளையே காணமுடியவில்லையே என்றும் மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments