ஜெயலலிதா மறைவால் உயிரிழந்த 77 பேருக்கு நிதி உதவி!

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அதிர்ச்சியில் உயிரிழந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நல குறைவினால் கடந்த செப்டம்பர் 22ந்தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீயலே ஆகியோர் சென்னைக்கு வந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்து விட்டார் என அறிவிக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி செய்தியை கேட்ட அவரது தொண்டர்கள் உள்ளிட்ட பொது மக்களில் 77 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அவரது மறைவால் உயிரிழந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments