இதனால் தான் ஜெயலலிதா உடல் எரியூட்டாமல் புதைக்கப்பட்டதாம்!

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவரது உடல் எரியூட்டப்படாமல், புதைக்கப்பட்டது குறித்து பலரது புருவங்களும் உயர்ந்தன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா உடலுக்கு அவரது தோழி சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார். அவருடன், ஜெயலலிதாவின் சகோதரர் மகனும் இறுதிச் சடங்குகளை செய்தார். இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

ஆனால், ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயலலிதாவின் உடல் எரியூட்டப்படாமல், புதைக்கப்பட்டது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர் எந்த மதம், சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், அனைத்து திராவிடக் கட்சித் தலைவர்களும் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் என அனைவரின் உடல்களும் எரியூட்டப்பட்டதில்லை. அவர்களது உடல்கள் சந்தனக் கட்டைகளுடன், பன்னீர் தெளித்து நல்லடக்கம் செய்யப்படுவதே வழக்கம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் டிஎன் கோபாலன் கூறுகையில், ஜெயலலிதாவின் உடலுக்கு அவரது தோழி சசிகலாவும், அண்ணன் மகன் தீபக்கும் இறுதிச் சடங்குகளை செய்தனர். எம்ஜிஆர் உடல் புதைக்கப்பட்டது போலவே ஜெயலலிதாவின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டுமின்றி மெரினா கடற்கரையில், உடலை எரியூட்டுவது என்பது சிரமமான காரியம். மேலும், அவர் புதைகப்படுவதன் மூலம், அவரது நினைவிடத்தை அவ்விடத்தில் உருவாக்க முடியும். அது மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தவும் வசதியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments