வீடு திரும்பினார் கருணாநிதி: ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த போவதாக தகவல்?

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவரான கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வரான ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய இழப்பை தாங்க முடியாமல் பலரும் அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவரான கருணாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அங்கு உள்ளனர்.

கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி அதிகாலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மீசெல்ஸ் எனப்படும் உடல் கொப்புளங்களுக்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி உள்ளிட்டவர்கள் அவரைக் கவனித்து வந்தனர்.

சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியிடம் , தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை கனிமொழி தான் கூறிதாக செய்திகள் வெளியாகின.

இதை அறிந்த அவர் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல், அமைதியாக இருந்த கருணாநிதி, அந்த அம்மாவைப் போய் பார்த்துட்டு வாம்மா எனக்கூறி கனிமொழியை அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கருணாநிதி டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மெரினா சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments