100 கோடி கறுப்பு பணத்தை மாற்றிய ரெட்டி! தற்கொலை செய்து கொண்டவரின் பரபரப்பு கடிதம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

பா.ஜ.க, மூத்த தலைவரும், சுரங்க தொழிலதிபருமான, ஜனார்த்தன் ரெட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கார் ஓட்டுனர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நவம்பர் 16ம் திகதி ஜனார்த்தன் ரெட்டி தனது மகள் பிரம்மினியின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார்.

மத்திய அரசின் பழைய 1000, 500 ரூபாய் ஒழிப்பு திட்ட அறிவிப்பின் போது நடந்த இந்த பிரமாண்ட திருமணம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் கர்நாடக அதிகாரி ஒருவரின் கார் ஓட்டுனர் ரெட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடிதம் எழுதிவைத்துவிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அந்த கடிதத்தில், ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசு அறிவித்தவுடன், ரெட்டி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு பணத்தை மாற்றிக் கொண்டார்.

25 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தாஜ் ஹோட்டலில் வெள்ளை பணமாக மாற்றினார். அதற்காக இரண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் கர்நாடக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பிருக்கிறது. அவருக்கு ரெட்டி 20 சதவீத பங்கு கொடுத்துள்ளார். இந்த விடயம் எனக்கு தெரிந்ததால் இருவரும் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments