ஜெயலலிதாவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய தீபா

Report Print Jubilee Jubilee in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அவரது அண்ணன் மகளான தீபா இன்று மாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அப்போலோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 5ம் திகதி இரவு 11.30 மணியளவில் காலமானார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே சசிகலா, இளவரசி ஆகியோரின் குடும்பத்தினர் இருந்தனர். அதேபோல் அதிமுக அமைச்சர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர்.

ஆனால் ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா அங்கே தென்படவில்லை. போயஸ் கார்டனில் நடந்த சடங்கு சம்பிரதாயங்களிலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு தீபா, பால், பூ முதலிய பொருட்களுடன் அஞ்சலி செலுத்த வந்தார்.

அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments