சோ ராமசாமி உடல் தகனம்: அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இறுதி அஞ்சலி

Report Print Jubilee Jubilee in இந்தியா

மறைந்த பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ.ராமசாமியின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

82 வயதான சோ.ராமசாமி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்த அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 29ம் திகதி சோவின் உடல்நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு அவர் மீண்டும் சிரமப்பட்டார்.

இந்த நிலையில் சோவின் உடல்நிலை நேற்று இரவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் மாரடைப்பால் சோவின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது.

இதனையடுத்து சோவின் உடல் சென்னை அடையாறு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மாலையில் அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments