ஜெயலலிதாவை பார்க்க பதறிப்போய் வந்த அஜித்: பல்கேரியா டூ சென்னை.. பரபர தருணங்கள்!

Report Print Jubilee Jubilee in இந்தியா

பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் விமான சேவையில் ஏற்பட்ட தாமதத்தால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மெரீனா கடற்கரைக்கு சென்று ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

அஜித் தனது 57வது படத்தின், படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் இறப்பு செய்தி அவருக்கு தெரியவில்லை. பனிக்குகைக்குள் அஜித் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அங்கு செல்போன் சிக்னல்கள் எடுக்கவில்லை.

படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த பிறகே அஜித்திற்கு முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி தெரியவந்தது.

இந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்த அஜித், பல்கேரியாவில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு வருவதற்கு முயற்சி செய்தார்.

சிறிய சிறிய விமானங்கள் மூலம் பயணம் செய்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார்.

தன் வீட்டிற்கு கூட செல்லாமல் அங்கே காத்திருந்த மனைவி ஷாலினி, மைத்துனர் ரிச்சர்ட், மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்று அங்கு ஜெயலலிதாவின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையில் துக்ளக் ஆசிரியர் சோ இறந்த செய்தி அஜித்துக்கு தெரியவந்ததால் அங்கிருந்து சோ சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று சோவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா அப்போது இருந்தே சினிமா நடிகர்களிலேயே அஜித் மீது தனி அன்பு செலுத்தி வந்தார் . இதனாலே கன்னிமாரவில் நடந்த அஜித் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார் ஜெயலலிதா.

இந்த அன்பின் துடிப்புதான் அஜித்தை பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு பதறிப் போய் வரவழைத்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments