இறுதிச்சடங்கில் சிரித்தபடியே ரசிகருடன் செல்பி: சர்ச்சையில் சிக்கிய கருணாஸ்

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் நடிகர் கருணாஸ் ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்தது இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்கு பிறகு ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது.

குடியரசு தலைவர், பிரதமர், உலக நாடுகளின் தூதர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் என பலரும் மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின்னர், மாலை 6 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது அந்த இடத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள், பிரமுகர்கள் என அனைவரும் சோக முகத்துடனும் காணப்பட்டனர்.

ஆனால், நடிகர் கருணாஸ், ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments