ஜெயலலிதாவின் இடத்தில் அடுத்தது யார்? வெளியான பரபரப்பு தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா

அதிமுகவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் தனக்கு பதில் பொது செயலாளராக மதுசூதனனே இருக்கட்டும் என சசிகலா யோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொது செயலாளராகவும் இருந்து வந்தார்.

அவர் மறைவுக்கு பின்னர் தற்போது யார் அடுத்த பொது செயலாளர் என்ற மிகப் பெரிய கேள்வி அதிமுக கட்சியினரிடையே எழுந்துள்ளது.

திரைமறைவில் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் எப்போதும் தலையிட்டு வந்ததாக சொல்லப்பட்டு வந்த சசிகலா ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் பன்னீர்செல்வத்துக்கு பதில் வேறு யாரையாவது முதல்வராக்கவே நினைத்தார்.

ஆனால் மத்திய அரசின் தலையீடால் அது நிறைவேறாமல் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

தற்போதைய நிலையில் அதிமுக முக்கிய புள்ளிகள் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கே அதிகம் என்பதால் தான் இப்போது பொது செயலாளர் ஆக நினைத்தால் கட்சிக்குள் சர்ச்சை கிளம்பும்.

ஆகையால் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் பொதுசெயலாளராக ஆவது தான் சரி என நினைக்கிறாராம் சசிகலா.

அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா மறைந்த உடனேயே கட்சியை உடைத்துவிட்டோம் என்ற நிலைவரக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக அவைத் தலைவராக உள்ள மதுசூதனை அதிமுக பொதுச்செயலராக நியமிக்கலாம் என்ற விதத்திலும் இதை செய்யலாம் என சசிகலா முடிவெடுத்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments