மனதை உருக வைத்த ஈழத்து கவிஞரின் இரங்கல் பாடல்

Report Print Murali Murali in இந்தியா

"அம்மா" என அனைவராலும் அழைக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் காலஞ்சென்ற ஜெயலலிதா அவர்களின் மறைவையெட்டி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ஜெயலலிதா அவர்கள கடந்த இரு மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அவர் காலமானதை அடுத்து முழு தமிழகமும், தமிழ் மக்களும் சோகத்தில் மூழ்கி போயிருந்தனர்.

குடியரசு தலைவர், பாரத பிரதமர் என பல தரப்பினரும் நேரில் சென்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையில், ஈழத்து கவிஞர் அஸ்மின் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுக இசையமைப்பாளர் வர்சன் இசையமைத்துள்ள இந்தப்பாடல், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் இரங்கல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments