ஜெயலலிதா மரணத்தில் அனைத்துமே மர்மம்!

Report Print Raju Raju in இந்தியா

அனைத்துமே மர்மம்##??

மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.

சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.

தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.

3 மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை.

இது யாருடைய உத்தரவு??

3 மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?

அனைத்தும் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே...??

கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?

இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.

அமைச்சர்களும் எந்த குழப்பமின்றி இலாகா நியமிக்கப்பட்டு உடனடியாக எப்படி பதவியேற்க முடிந்தது?

ரத்த உறவான அவரது அண்ணன் மகளை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிரட்டி வீட்டுக்கு செல்ல சொன்ன காரணம் என்ன?

தந்தி டிவி மரணத்தை முன் கூட்டியே அறிவித்ததும், அதை உடனே திரும்பபெற்றதும் யாரால், ஏன்?

இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் இவ்வளவு தெளிவாக ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவியேற்பு நிகழ்சி நடத்தியது எப்படி ?

கைது நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பதவியேற்ற நீங்கள் தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுக்க எவ்வாறு முடிந்தது??

காலையில் இருந்து இந்த இரவு் வரையும் கூட மருத்துவமனை முன்பாக பட்டினியாக அழுது உருண்டு கிடப்பதில் பஞ்சபராரி பாமர மக்களை தவிர ஒரு பண முதலை கூட தென்படவில்லையே எப்படி.??

இன்னும் கேள்விகள் ஆயிரம் உள்ளது எனது சார்பில் அல்ல..

முதல்வர் மீது மாசில்லா அன்பு கொண்டு வாக்களித்த எம் வெள்ளந்தி பாமர தமிழ்மக்கள் சார்பாக.

டிராபிக் ராமசாமியின் பதிவு!

ஒரு தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு கூட கடைசி ஆசை என்னவென்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள், ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதா விடயத்தில் அது கூட நடந்ததா என சந்தேகமாக உள்ளதாக டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தனது பேஸ்புக் பக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

அதில், தூக்குத் தண்டனைக் கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள்.

இங்கு அது கூட நடந்ததா என்பது சந்தேகமே.

ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டாமல், ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டாமல்... இப்படி ஒரு ஜீவனை அடைத்து வைத்து அனுப்பி வைத்துவிட்டார்களே.

மரணத்தில் கூட கண்ணியத்தைக் காட்டாமல் எப்போது இறந்தார் என்பதில் கூட குளறுபடி செய்யவேண்டிய சுய நல மனிதர்கள் தான் அவரைச் சுற்றிலும் இருந்திருக்கிறார்கள் போலும்.

மொத்தத்தில், ஜெயலலிதா என்னும் " அடிமைப் பெண்", ஐந்துமுறை நாட்டை ஆண்டாலும், இறுதி வரை தனக்கு விருப்பம் இல்லாத வாழ்வைத்தான் பாவம் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்.

மரணத்தின் மூலம், விட்டு விடுதலையாகி!!!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments