ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்குமார்

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று அதிகாலையிலேயே மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் அஜித்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5ம் திகதி இரவு 11.30 மணிக்கு காலமானார், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

லட்சக்கணக்கான மக்கள் புடைசூழ நேற்று மாலை எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித், முதல்வர் இறந்த செய்தி கேட்டதும் சென்னைக்கு வர முடிவு செய்தார்.

விமான சேவையில் தாமதம் ஏற்பட்டதால் இன்று காலை 4.30 மணிக்கு சென்னை வந்தார்.

உடனே நேராக மெரினா கடற்கரைக்கு வந்த அஜித், மனைவி ஷாலினி, ரிச்சர்ட்டுடன் அஞ்சலி செலுத்தினார்.

அங்கிருந்து சோ மறைந்த செய்தி கேட்டவுடன் அப்பல்லோ சென்று சோ-வுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments