ஜெயலலிதா மறைவு: அதிர்ச்சியில் 29 பேர் மரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து தமிழகம் முழுவதும் 29 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேர் மரணமடைந்துள்ளதாக கூறப்ப்டுகிறது. அதில் ஒருவர் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி ஆவர். குறித்த நபர் விஷமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் அதிமுக கிளை நிர்வாகி. குறித்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக இருப்பதாக டிவியில் ஒளிபரப்பான செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இதில் ஒருவர் அதிமுக தொண்டர் என கூறப்படுகிறது. டிவியில் முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் 4 பேரும், நாகை மாவட்டத்தில் 9 பேரும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்ப்டுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு பேரும், வேலூர் மாவட்டத்தில் 4 பேரும் குமரி மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.

ஒட்டு மொத்த தமிழகத்தில் இதுவரை 29 பேர் முதல்வர் ஜெயலலிதா மறைவால் அதிர்ச்சியடைந்து உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments