சிறு வயதில் ஜெயலலிதாவின் நிலை இதுதான்!

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது சிறுவயதில் இருந்து பல துன்பங்களை அனுபவித்துள்ளார். அவருக்கு நல்லது, கெட்டதை பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தனிமையில் வாழ்க் கையை தள்ளிய அம்மு என்கிற ஜெயலலிதாவின் நிலையும் அப்படிதான். அதனால், தான் தனிமையில் இருந்து தப்பிக்க அவர் பரதநாட்டியம் போன்ற கலைகளை கற்க சென்றார்.

அந்த நாட்களில் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியரான கே.ஜெ.சரசாவிடம், நாட்டியம் பயில அம்முவை அனுப்பினார் அவரது தாயார் சந்தியா.

ஆனால், நிச்சயமாக அவரது தாயாருக்கு அப்போது திரைப்படம் குறித்த எந்தத் திட்டமும் இல்லை. தொடக்கத்தில் அம்மு திரைப்படத் துறைக்கு வர வேண்டாம் என்றுதான் சந்தியா விரும்பினார்.

அம்முவின் விருப்பமும் அதுவாகத்தான் அப்போது இருந்தது. அம்முவுக்கு திரைத்துறையை அப்போது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அம்மாவின் அரவணைப்புத் தனக்குக் கிடைக்காமல் இருப்பதற்கு திரைத்துறைதான் காரணம் என்று அம்மு நம்பினார்.

அது மட்டுமல்ல, திரைத்துறையைச் சார்ந்தவர்களையும் அந்த வயதில் அம்முவுக்குப் பிடிக்கவில்லை. சில சமயம் அம்மாவை பார்ப்பதற்காகத் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் வீட்டுக்கு வருவார்கள்.

குண்டாக, ஒல்லியாக, வளர்த்தியாக, எண்ணெய் வழியும் முகத்துடன் எனப் பலர் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். எனக்கு அவர்களைக் கொஞ்சமும் பிடிக்காது என்று அவரது நெருங்கிய தோழியிடம் ஜெயலலிதா கூறி உள்ளார்.

வாழ்த்திய சிவாஜி

1960ம் ஆண்டு அப்போது அம்முவுக்கு 12 வயது. மிகவும் கோலாகலமாக அம்முவின் நடன அரங்கேற்றத்துக்கு சந்தியா ஏற்பாடு செய்தார். திரைப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் கோலாகலமாக அரங்கேற்றம் நடைபெற்றது. அம்முவின் நடனத்தைப் பார்த்து அனைவரும் மெய்சிலிர்த்துத்தான் போனார்கள்.

சிவாஜி அம்முவிடம், “நீ தங்க சிலைபோல் இருக்கிறாய்... எதிர்காலத்தில் நீ நிச்சயம் பெரிய நடிகையாக வருவாய்” என்று தன் சிலிர்ப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தவும் செய்தார்.

இந்த வார்த்தைகளை அவர் மனதின் அடியாழத்திலிருந்து சொல்லி இருந்தாலும் அவை, உயிர் பெறும் என்று நிச்சயம் அப்போது அவரே நினைத்திருக்கமாட்டார். சந்தியாவுக்கு மட்டும் இந்த வார்த்தைகள் மகிழ்ச்சியைத் தந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments