ஜெயலலிதாவுக்கு இறுதிசடங்கு செய்தது யார் தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகன் தீபக் என்பவர் சசிகலாவுடன் இணைந்து இறுதிசடங்குகளை செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (05.12.2016) இரவு 11.30 மணி அளவில் காலமானார். இதனையடுத்து அவரது உடலை மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்தில் எடுத்து வரப்பட்டு குலவழக்கப்படி சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து இன்று முழுவதும் சென்னை ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து 4.30 மணியளவில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி ஊர்வலமாக ஜெயலலிதா கொண்டு வரப்பட்டார்.

மாலை 6.00 மணிக்கு, அவரது உடல் மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, சசிகலாவுடன் இறுதிச்சடங்குகள் செய்தவர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக்ஜெயக்குமார் ஆகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments