இதுவரை 7 முதலமைச்சர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கருணாநிதி!

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில் இதுவரை முதலமைச்சர்களாக பதவி வகித்த இராஜாஜி முதல் ஜெயலலிதா வரை 7 பேருக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

92 வயதாகும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தமது அரசியல் வாழ்வில் இதுவரை தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பு வகித்த 7 பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

1972-ஆம் ஆண்டு தமது 94-வது காலமான அப்போதைய முதல்வர் இராஜாஜிக்கும் தற்போது தனது 68-வது வயதில் காலமான முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தும் பேற்றினை கருணாந்தி பெற்றுள்ளார்.

  • 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் தமது 94வது வயதில் இராஜாஜி காலமானார்.
  • 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் திகதி தமது 59வது வயதில் சி.என்.அண்ணாதுரை காலமானார்.
  • 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் திகதி தமது 72வது வயதில் காமராஜர் காலமானார்.
  • 8 நாட்கள் பொறுப்பு முதலமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன்.
  • 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி தனது 70வது வயதில் எம்ஜிஆர் காலமானார்.
  • 23 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த ஜானகி எம்ஜிஆர்.
  • 6 முறை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments