ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு? வெளியான பரபரப்பு தகவல்கள்

Report Print Jubilee Jubilee in இந்தியா

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

அரசியல் வாழ்விற்கு வரும் முன்னரே திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்தவர் ஜெயலலிதா. இதன் போதே அவர் பல சொத்துக்களை வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது அவர் மறைந்த நிலையில் அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தேர்தலில் போட்டியிடும் போது ஜெயலலிதா தன்னிடம் ரூ.113.74 கோடியில் சொத்துக்கள் இருப்பதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இதில் அசையும் சொத்துக்கள் ரூ.41.63 கோடி என்றும், அசையா சொத்துக்கள் 72.09 கோடி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்வேறு நிறுவனங்களிலும் ஜெயலலிதா முதலீடு செய்திருந்தார்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் ரூ.49.96 கோடி ரூபாய். இது 1967ம் ஆண்டு ஜெயலலிதா தனது தாயுடன் சேர்ந்து ரூ.1.32 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பல சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்பது தொடர்பில் பிரபல ஆங்கில ஊடகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் கொடநாடு சொத்துக்கள் சசிகலா நடராஜனுக்கும், போயஸ் கார்டன் இல்லம் இளவரசியின் மகன் விவேக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments