17 வயது சிறுமியுடன் நடிப்பதா..தயங்கிய எம்ஜிஆர்

Report Print Amirah in இந்தியா

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்க எம்.ஜி.ஆர் தயங்கியதாக தெரியவந்துள்ளது.

வைபவம் ஒன்றிற்கு நடிகை சந்தியாவுடன் வந்த அவரது மகளான ஜெயலலிதா சென்றுள்ளார்.

இதன் போது அவரை பார்த்த இயக்குனர் பி.ஆர். பந்துலு தனது சின்னட கொம்பே கன்னட படத்தில் ஹீரோயினாக்கினார்.

அதுதான் ஜெயலலிதா ஹீரோயினாக நடித்த முதல் படம்.

அதன் பிறகு பந்துலு தான் தயாரித்து, இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் ஜெயலலிதாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த நேரம் படத்தின் நாயகனான நடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 17 வயது சிறுமியுடன் போய் எப்படி ஜோடியாக நடிப்பது என்றாராம்.

சின்னப் பிள்ளையாக உள்ளது என்று கூறி எம்.ஜி.ஆர். நடிக்க தயங்க பந்துலு தான் அவரை சமாதானம் செய்துள்ளார்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதுடன், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து 28 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments