எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஒற்றுமை

Report Print Raju Raju in இந்தியா

மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆருக்கும் உடல் நலம் மற்றும் இறப்பு விடயத்தில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன

கடந்த 1984 ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சில காலமே ஆன சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக முதல்வராக இருக்கும் போதே ஜெயலலிதாவும் உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோவில் அனுமதிக்கப்பட்டார்.

அதுவும் எம்.ஜி.ஆர் இருந்த 2008 எண் கொண்ட அறையிலேயே ஜெயலலிதாவும் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்த எம்.ஜி.ஆர் உடல் பொது மக்கள் பார்வைக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. தற்போது அதே விடயம் தான் ஜெயலலிதாவுக்கு நடந்துள்ளது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உடல் சென்னை மெரினா கடற்கடையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதே போலவே புரட்சி தலைவி ஜெயலலிதாவின் உடலும் இன்னும் சில மணி நேரத்தில் அதே மெரினா கடற்கடையில், எம்.ஜி.ஆர் சமாதிக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments