16 மணிநேரத்திற்கு பின்னர்...அத்தையை பார்த்து கதறிய தீபா!

Report Print Aravinth in இந்தியா

முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜெ.யின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு அவருக்கு பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள், பல அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் ரத்த உறவான அவரது அண்ணன் மகள் தீபா முதல்வர் அருகில் செல்ல அனுமதிக்காத காரணத்தால் கூட்டத்தோடு கூட்டமாக 16 மணிநேரம் கழித்து அஞ்சலி செலுத்தி சென்றார்.

அப்போது, அத்தை நீ இல்லாத காரணத்தால் தன்னை உன்னருகில் கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள் எனக் கண்ணீர் மல்க கதறி அழுதுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments