ஜெயலலிதா நிரந்தரமாக துயில் கொள்ளும் இடம் தயார் நிலையில்!

Report Print Amirah in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இன்று மாலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகிலேயே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றது. பின்னர் அங்கு நினைவிடம் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இடத்தை தெரிவு செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், அங்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால், சிரேஷ்ட அதிகாரிகள் கண்காணிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அததோடு கடற்கரைச் சாலையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

எனவே குறித்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஏறாளமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments