எம்ஜிஆர் உடலில் கூட போர்த்தாத தேசியக் கொடி ஜெ. உடலில் ஏன்...சந்தேகத்தில் நெட்டிசன்கள்

Report Print Aravinth in இந்தியா

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் பொழுதே உயிரை விட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் உடலுக்கு கூட போர்த்தாத தேசியக் கொடி..தற்போது மறைந்துள்ள ஜெயலலிதாவின் உடலில் ஏன் போர்த்தப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி தமிழகத்தின் முதல்வராக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

அப்போது, பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அவருடன் 21 மணி நேரமாக தற்போது மறைந்த முதல்வர் நின்றிருந்தார்.

இந்நிலையில், எம்ஜிஆரின் உடலில் அதிமுக கொடி மட்டுமே போர்த்தப்பட்ட நிலையில் தான் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால், தற்போது மறைந்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு பல அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது உடலில் அதிமுக கட்சி கொடியுடன், தேசியக் கொடியும் போர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவருமே முதல்வராக இருந்தபோது மரணித்தவர்கள்தானே... பிறகு ஏன் இந்த வேறுபாடு என சமூக வலைதளங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மேலும், பேரறிஞர் அண்ணாவும் முதல்வராக இருந்த போதுதான் மறைந்தார்... அவரது உடலுக்கும் தேசியக் கொடிதானே போர்த்தப்பட்டது என்றும் சுட்டுகின்றனர் சில நெட்டிசன்ஸ்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments